ஜூரஹரேஸ்வரர் ஜூரதேவர்
ஜூரத்தின் வேகத்தைக் குறைத்து குணம் வழங்கவல்ல இறைவன் என்பதால் இவருக்கு ஜீரஹரேஸ்வரர் மற்றும் ஜீரஹரதேவர் என்ற பெயர்களில் ஒருசில சிவாலயங்களில் தனிச் சன்னிதிகள் அமைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சில கோவில்களில் தனி மூர்த்தங்களாக இருப்பதையும் காணலாம். விதவிதமான தோற்றங்களில் குறிப்பாக மூன்றுமுகம், மூன்று கரங்களுடன் சில இடங்களிலும், சில இடங்களில் சிவலிங்கத் திருமேனியுடனும் இந்த ஜூரஹரேஸ்வரர் காட்சி தருகிறார்.
ஜூரஹரேஸ்வரர் இருக்கும் கோவில்கள் சில..
வைத்தீஸ்வரன்கோவிலில் அங்காரகன் சன்னிதிக்கு பின்புறம் இவர் சன்னிதி உள்ளது.
* தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் கோவில்
* திருவையாறு ஐயாரப்பர் கோவில்
* கும்பகோணம் கும்பேசுவரர் கோவில்
* கும்பகோணம் காளகஸ்தீஸ்வரர் கோவில்
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோவில்
* திருவாரூர் தியாகராசப் பெருமாள் கோவில்
* திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கொண்டீசுரம் பசுபதிநாதர் கோவில்
* திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்பர் மாகாணம் மகாகாளேசுவரர் கோவில்
* திருவாரூர் முத்துப்பேட்டை அருகில் உள்ள திருஉசாத்தானம் என்ற கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவில்
* திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரிஷிஸ்வரக் கோவில்
* ஈரோட்டுக்கு வடக்கே உள்ள பவானி என்னும் திருநணா சங்கமேஸ்வரர் கோவில்
* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
* சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவில்
* நெல்லை களக்காடு சத்யவாகீசுவரர் கோவில்
இன்னும் வேறு சில சிவாலயங்களிலும் ஜீரஹரேஸ்வரர் இருக்கலாம்.
ஜூர வேகம் குறையவும், நோய்ப் பிடியில் இருந்து வெளியே வரவும் சிவ சொரூபமான ஜீரஹர ஈஸ்வரருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்து, மிளகு சீரகம் கலந்த ரசம் வைத்து புழுங்கல் அரிசி சாதம் படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த சாதத்தை காய்ச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டால் நலம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
0 Comments
Post a Comment