முப்புரம் எரித்த முக்கண்ணன் ஈசன்:

தாரகாஷன், கமலாசன்,
வித்துன்மாலி ஆகிய மூன்று அரக்கர்கள் தீவிர மன மொன்றிய சிவன்பக்தர்கள். அதனால் சாகாவரம் பெற்றவர்கள். அதனால் அவர்களை  தேவர்களுக்கு
பிடிக்காததால் போரிட்டபோது அவர்கள் வெற்றி பெற்று தேவர்களை சிறை செய்து  துன்பப்படுத் தினர். இதனால் இந்திரன் தலைமையில் மஹாவிஷ்ணு விடம் முறையிட்டனர். அவரும் அனைவரையும் கூட்டிக் கொண்டு சிவனிடம் சென்று  முறையிட்டு அவர்களை அழிக்க வேண்டி னார். ஈசனும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தனது பணியாளான
விஷ்வ கர்மாவை அழைத்து ஒரு தேர் தயார் செய்ய பணித்தார். அத்தேருக்கு சூரிய சந்திரர்  சக்கரங்கள்
ஆயினர். பிரம்மன் சாரதியானார். நான்கு வேதங்கள்குதிரைகளாயின. மலை வில்லாக மகா
விஷ்ணுஅம்பானார். எல்லாம் தயாரானவுடன் மேற்படி அசுரர்களை அவர்களது கோட்டைக்கு வந்து அவர்களை எதிர்த்து  எதுவும்  செய்யாமல் ஒரு சிறுமுறுவல்செய்தார்.
உடனே சாம்பலானது.
முப்புரம். அதனால் தங்கம், வெள்ளி, இருப்பு ஆகியவை எல்லாம் உருகி பூமியோடு கலந்தது.என்னஇருந்தாலும்
அவர்கள் சிவ பக்தர்களா யிற்றே. அதனால் அந்த மூன்று அரக்கர்களில் இருவரை தனது மெய்
காப்பாளராகவும் ஒருவரை தன்னடியில் வாத்தியம் வாசிப்ப வராக வைத்துக் கொண்டார். இதை திருமூலர் கூறும்போது
ஆணவத்தை இரும்பு என்றும்
மாயையை வெள்ளி, கன்மத்தை
பொன்னென்றும் கூறி அன்புஅறிவு ஆற்றல் இவை மூன்றும் அசுரர்கள் என்றும் அவைகள் அதிகமானால் அசுரத்தன்மையாக மாறிவிடும். ஆகவே இந்த பொன் வெள்ளி போன்றவற்றின் மீது அதிகமாக ஆசை கொள்ளக் கூடாது.  மற்ற தீய சக்திகள் எல்லாம் அழிக்கப்பட இந்த மூன்று பேரும் இறை சிந்தனையோடு இருந்ததால்
இறைவனுக்கு அடியார் ஆக
ஆகிவிட்டனர். ஆகவே நண்பர்களே பொன் வெள்ளி பொருள்கள் மீது அளவற்ற பற்றினை ஒழித்து ஈசனின் மீது பக்தி கொண்டால்  ஈசன் தனது பக்தர்களை ஆணவம், கன்மம், மாயை இவற்றை தன் திருவருளால் எரித்து  ஆட்கொள்வார்  ஈசன்.
ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்.